மான் இறைச்சி சமைத்தவர் கைது வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற 8 பேர் பிடிபட்டனர்
அந்தியூர் அருகே மான் இறைச்சி சமைத்தவர் கைது செய்யப்பட்டார். மேலும் வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற 8 பேர் பிடிபட்டனர்.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதி சென்னம்பட்டி மலைக்கிராமத்தில் மான் வேட்டையாட முயற்சி செய்வதாக சென்னம்பட்டி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து வனச்சரகர் முருகேசன் மற்றும் வனத்துறையினர், அதிரடிப்படை வீரர்கள் அங்கு ரோந்து சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் 8 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். வனத்துறையினரை பார்த்ததும் 8 பேரும் அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றார்கள். வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 42), பாலு (46), மேட்டூர் அருகே உள்ள காவிரிபுரத்தை சேர்ந்த பச்சியண்ணன் (26), ரமேஷ் (18), கொமராயனூரை சேர்ந்த வாசன் (49), செல்வம் (50), சேலம் பாலமரத்தோட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (49), கொளத்தூரை சேர்ந்த சண்முகராஜா (43) ஆகியோர் என்பதும், இவர்கள் மானை வேட்டையாட வனப்பகுதியில் சுற்றி திரிந்ததும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து வனத்துறையினர் 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வேட்டையாட வைத்திருந்த சுருக்கு கயிறு, வெடி மருந்து, 4 நாட்டு துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் அந்தியூர் அருகே கோவிலூரில் உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சியை சமைப்பதாக பர்கூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்த வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒருவர் மான் இறைச்சியை சமைத்து கொண்டிருந்தார். அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவரது பெயர் பெருமாள் (46) என்பது தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில், ‘பர்கூர் வனப்பகுதியில் இருந்து செந்நாய் ஒரு மானை துரத்தி வந்துள்ளது. வனப்பகுதியையொட்டிய கிராமத்தில் வைத்து அந்த செந்நாய் மானை கடித்துகொன்றது. அந்த வழியாக வந்த பெருமாள் இதை பார்த்துள்ளார். பின்னர் அவர் செந்நாயை துரத்திவிட்டு மானின் இறைச்சியை எடுத்துச்சென்று வீட்டில் சமைத்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவர் சமைத்த ஒரு கிலோ இறைச்சியும், காய வைத்து இருந்த 4 கிலோ மான் இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டன.