டெங்கு காய்ச்சல் பரவும் விதமாக குப்பை கொட்டிய 40 பேருக்கு அபராதம்

புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவும் விதமாக குப்பை கொட்டிய 40 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிமனைகளை பராமரிக்காத 12 பேருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2017-10-19 23:00 GMT

புதுச்சேரி,

புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பினை தொடர்ந்து அதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் விழிப்புணர்வு பிரசாரங்களும், கொசுமருந்து தெளிக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

மேலும் கவர்னர் மற்றும் அமைச்சர்களும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். குப்பைகளை கண்ட இடத்தில் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும், கழிவுநீர், குப்பைகள் தேங்கும் விதமாக காலிமனைகளை வைத்திருப்பவர்களுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளில் புதுவை நகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. இதன்படி 40 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆணையர் கணேசன் கூறும்போது, புதுவை முத்தியால்பேட்டையில் காலிமனையை சரியாக பராமரிக்காத 12 பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் பரவும் விதமாக குப்பையை கொட்டிய 40 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்