மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; வேளாண் அதிகாரி பலி
கடலூர் முதுநகரில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் வேளாண் அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் அருகே உள்ள சின்னகாரைக்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் குமாரவேல் (வயது 43). இவர் வேலூரில் தங்கி அங்குள்ள அரசு வேளாண் துறை அலுவலகத்தில் உதவி வேளாண் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு குமாரவேல் சின்னகாரைக்காடுக்கு வந்தார். நேற்று மதியம் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் கடலூர் முதுநகருக்கு வந்தார்.
அங்கு அவர் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர்-சிதம்பரம் சாலையில் மார்க்கெட் அருகே சென்ற போது, பின்னால் கடலூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று, குமாரவேல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட குமாரவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் விரைந்து வந்து பலியான குமாரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான குமாரவேலுக்கு தங்கமணி என்ற மனைவியும், தினேஷ்குமார், சூரியா என்ற 2 மகன்களும் உள்ளனர்.