பொங்கலூர்அருகே டெங்கு தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
பொங்கலூர் அருகே உள்ள நாச்சிபாளையத்தில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
பொங்கலூர்,
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பொருட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக முதலில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுத்தாலே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும் என்ற நோக்கத்தில் வீடுகள் தோறும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறை இணைந்து களப்பணியாற்றி வருகிறார்கள்.
அந்த வகையில் நேற்று காலை பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாச்சிபாளையம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்றது. இதனை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். காலை 6 மணிக்கு நாச்சிபாளையம் வந்த கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமையின் மாவட்ட திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் ஆகியோர் ஆதிதிராவிடர் காலனி மற்றும் இதர பகுதிகளுக்கு சென்று வீடுகளில் தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் பாத்திரங்கள், சாலை ஓரங்களில் கிடந்த பிளாஸ்டிக் டப்பாக்கள், தேங்காய் தொட்டிகள் உள்பட டெங்கு கொசு உற்பத்தியாகும் என சந்தேகித்த அனைத்தையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழ்நிலை குறித்து மக்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். தொடர்ந்து ஊராட்சி பகுதிகளில் குப்பைகள் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்றது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நிலவேம்பு கஷாயம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் ஆகியன நடைபெற்றது.
இதில் பொங்கலூர் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சுந்தரவேல் கலந்துகொண்டு பொதுமக்களிடம் டெங்கு கொசு எவ்வாறு உற்பத்தியாகிறது?, பின்னர் அது எவ்வாறு பரவுகிறது?, தடுக்கும் முறைகள் குறித்து விளக்கி பேசினார். இந்த ஆய்வின்போது பல்லடம் தாசில்தார் சுப்பிரமணியம், பொங்கலூர் ஒன்றிய ஆணையாளர் மகுடேஸ்வரி, வட்டார வளர்ச்சி அதிகாரி(ஊராட்சி) ராஜமாணிக்கம், மண்டல அதிகாரிகள் விஜயகுமார், வெங்கடேஷ்வரன், பாலசுப்பிரமணியம், சுரேஷ்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.