6 கூரை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல் பட்டாசு வெடித்ததால் விபரீதம்
கும்பகோணம்-பாபநாசத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது 6 கூரை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
கும்பகோணம்,
தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்த போது கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி மடவளாகம் பகுதியை சேர்ந்த ராஜா, சோழபுரம் விளந்தகண்டம் பகுதியை சேர்ந்த ராஜசேகர், குப்பாங்குளம் பகுதியை சேர்ந்த தங்கமணி, காமராஜர் நகர் 7-வது தெருவை சேர்ந்த செந்தில் ஆகிய 4 பேரின் கூரை வீடுகளும் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இந்த தீவிபத்தில் 4 வீடுகளும் எரிந்து சாம்பலானது. வீடுகளில் இருந்த டி.வி., மிக்சி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என தெரிகிறது.
இதே போல் தாராசுரம் சன்னதி தெருவை சேர்ந்த சசிகுமார் என்பவரது வீட்டின் பின்புறமுள்ள தென்னை மரத்தில் ராக்கெட் பட்டாசு வெடித்ததில் தென்னை மரம் எரிந்தது. மேலும் கும்பகோணம் ராமச்சந்திரபுரம் தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது வீட்டில் மின் கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டி முழுவதும் எரிந்து நாசமானது.
பாபநாசம் திருப்பாலத்துறையில் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 49). தீபாவளியன்று அந்த பகுதியில் பட்டாசு வெடித்த போது தீப்பொறி பறந்து விழுந்து வெங்கடேசன் கூரை தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த ஆதார் அட்டை, டி.வி. மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்தன். இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் இருக்கும் என தெரிகிறது. தகவல் அறிந்து பாபநாசம் தாசில்தார் வெங்கடாசலம் அங்கு வந்து பார்வையிட்டு, தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரசின் நிவாரண உதவிகளை வழங்கினார்.
கபிஸ்தலம் இந்திரா காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது75). தீபாவளியன்று பட்டாசு வெடித்த போது இவர் கூரை வீட்டில் தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இந்த தீவிபத்தில் கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதனால் வீட்டில் இருந்த டி.வி. உளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதன்மதிப்பு ரூ.25 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. தகவல் அறிந்த அமைச்சர் துரைக்கண்ணு சம்பவ இடத்துக்கு வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அரசு நிவாரணம் ரூ.2 ஆயிரத்து 500, மற்றும் தனது சொந்த நிதி ரூ.2 ஆயிரம் சேர்த்து ரொக்கம் ரூ.4 ஆயிரத்து 500, வேட்டி, சேலை அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது தாசில்தார் வெங்கடாசலம், வருவாய் ஆய்வாளர் ஜெயமதி, மண்டல துணை தாசில்தார் சுந்தரமுர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கோபிநாதன் உள்பட பலர் உடன் இருந்தனர்.