தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி நாளில் ரூ.2¾ கோடி மதுவிற்பனை கடந்த ஆண்டை விட குறைந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி நாளில் ரூ.2¾ கோடி மதுவிற்பனை நடந்து உள்ளது.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி நாளில் ரூ.2¾ கோடி மதுவிற்பனை நடந்து உள்ளது.
டாஸ்மாக்தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதே நேரத்தில் கோர்ட்டு உத்தரவுப்படி ஏராளமான டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு கடந்த மாதம் முதல் மெல்ல, மெல்ல டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 105 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
விற்பனை குறைந்ததுநேற்று முன்தினம் தீபாவளியையொட்டி டாஸ்மாக் கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்தது. ஆனாலும் கடந்த ஆண்டை விட மதுவிற்பனை குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி நாளில் 5 ஆயிரத்து 400 பெட்டி பலவகை மது பாட்டில்களும், 2 ஆயிரத்து 400 பெட்டி பீர் வகைகளும் விற்பனையானது. மொத்தம் ரூ.2 கோடியே 95 லட்சத்துக்கு மதுவகைகள் விற்பனை நடந்தது.
இந்த ஆண்டு 4 ஆயிரத்து 900 பெட்டி மது பாட்டில்களும், 1,700 பெட்டி பீர் வகைகளும் விற்கப்பட்டு உள்ளன. இதனால் மொத்தம் ரூ.2 கோடியே 86 லட்சத்துக்கு மது வகைககள் விற்பனை நடந்து உள்ளது.
கடந்த ஆண்டை விட டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்து இருப்பதால் விற்பனை குறைந்து உள்ளது. அதே நேரத்தில் மது விலை அதிகரித்ததால் மொத்த விற்பனை கடந்த ஆண்டை நெருங்கி உள்ளது என்றும் டாஸ்மாக் அதிகாரி தெரிவித்தார்.