புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து

பஸ் கட்டணத்தை 2 மடங்காக உயர்த்தி அறிவித்து இருப்பது பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு என்று பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2017-10-17 22:53 GMT

புதுச்சேரி,

புதுச்சேரியில் பஸ் கட்டணத்தை திடீரென்று உயர்த்தி மத்திய அரசு அறிவித்து இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து லாஸ்பேட்டையை சேர்ந்த குடும்பத் தலைவி ஜெயந்தியிடம் கூறியதாவது:–

புதுவை மாநிலத்தில் தற்போது தான் வீட்டுவரி, மின்கட்டணம், தண்ணீர் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பஸ்களின் பயணம் செய்யும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களும், ஏழை எளிய மக்களும் மிகவும் சிரமப்படுவார்கள். இது மிகுந்த கண்டனத்திற்கு உரியது. காங்கிரஸ் அரசு கொண்டு வந்த அனைத்து கட்டண உயர்வுகளும் மக்களை கஷ்டத்திற்கு உள்ளாக்குகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசு மக்களை வஞ்சிக்கும் அரசாக உள்ளது. எனவே உடனடியாக இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்.

பஸ் கட்டண உயர்வு குறித்து மேலும் பலர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:–

புதுவையில் தற்போது பஸ் கட்டணத்தை அரசு திடீரென உயர்த்தியுள்ளது. தீபாவளி நேரத்தில் இந்த பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது ஓட்டுப் போட்ட மக்களுக்கு அரசு பரிசு கொடுப்பதாக உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் இலவச சர்க்கரை வழங்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது அன்றாடம் பஸ்சில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏழை எளிய மக்களின் ஒரே வாகனம் பஸ்கள் தான்.

புதுவையில் ஆட்டோவுக்கு மீட்டர் பொருத்தி அதன்படி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் அவரை சரியான நடைமுறைக்கு கொண்டு வராததால் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் விருப்பப்படி கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுவையில் அன்றாடம் வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள் பஸ்சை தான் பயன்படுத்தி வருகின்றனர். புதுவையில் மற்ற வாகன வசதிகள் இல்லை. டெம்போ நகர பகுதியில் மட்டுமே இயக்கப்படுகிறது. நகரத்தில் இருந்து கிராம பகுதிக்கு செல்ல பஸ்சை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் பஸ் கட்டணத்தை உயர்த்தி இருப்பது ஒட்டு மொத்தமாக புதுவை மக்கள் அனைவரையும் பாதிக்கும். எனவே இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்.

இந்த அரசு திடீரென பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் தினமும் பஸ்களில் சென்று வரும் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர். பள்ளி மற்றும் கல்லூரிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்களில் செல்லும் மாணவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும். இது அவர்களின் பெற்றோருக்கு மேலும் அதிக செலவை ஏற்படுத்தும். எனவே அரசு உடனடியாக பஸ் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும்.

புதுவை மாநிலத்தில் திடீரென பஸ் கட்டணத்தை இந்த அரசு உயர்த்தியுள்ளது. இது ஏற்கனவே அனைத்து கட்டணங்களையும் உயர்த்தியுள்ள நிலையில் தற்போது உயர்த்தப்பட்டள்ள பஸ் கட்டணத்தால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர். எனவே அரசு உயர்த்திய பஸ் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்