புதுச்சேரியில் அ.தி.மு.க. ஆண்டுவிழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
புதுச்சேரியில் அ.தி.மு.க. ஆண்டுவிழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க.வின் 46–வது ஆண்டு தொடக்கவிழா உப்பளத்தில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேற்று நடந்தது.;
புதுச்சேரி,
விழாவில் அ.தி.மு.க. கட்சிக்கொடியேற்றி, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆரின் உருவசிலைக்கு மாலை அணிவித்தனர்.
விழாவில் அ.தி.முக. துணை செயலாளர்கள் கணேசன், பன்னீர்செல்வி, நாகமணி, பொருளாளர் சுத்துக்கேணி பாஸ்கர், நகர செயலாளர்கள் ரவீந்திரன், அன்பானந்தம், மீனவர் அணி செயலாளர் ஞானவேல், தொகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சிவக்குமார், ஜானிபாஸ், ஆனந்தன், கலியபெருமாள், பொதுக்குழு உறுப்பினர்கள் சிவாலயா இளங்கோ, செந்தில்முருகன் பிற அணி நிர்வாகிகள் ஆசிரியர் கணேசன், மோகன்தாஸ், சீனுவாசன், மருது உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நெல்லித்தோப்பு தொகுதியில் நடந்த விழாவில் லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கட்சிக்கொடியை ஏற்றினார். மேலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
அதன்பின் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் காசிலிங்கம், முன்னாள் எம்.பி. ராமதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, மாநில துணை செயலாளர் கோவிந்தம்மாள், செயற்குழு உறுப்பினர் இந்திரா முனுசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் நந்தன், வெரோனிக்கா உள்பட பலர் கலந்துகொண்டனர்.