நாகர்கோவிலில் நடைபெற இருந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா டிசம்பர் 13-ந் தேதிக்கு மாற்றம்
நாகர்கோவிலில் நடைபெற இருந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா டிசம்பர் 13-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி. கூறினார்.
நாகர்கோவில்,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் குமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முதலில் அக்டோபர் 16-ந் தேதி (அதாவது நேற்று முன்தினம்) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை நெருங்கி வந்ததின் காரணமாக இந்த தேதி மாற்றப்பட்டு, நவம்பர் 8-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் நாளை (வியாழக்கிழமை) நாகர்கோவில் நாகராஜா திடலில் கால்கோள்விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த விழா மீண்டும் நேற்று மாற்றப்பட்டது. அதாவது வருகிற டிசம்பர் 13-ந் தேதிக்கு மாற்றப்பட்டு இருப்பதாக குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் விஜயகுமார் எம்.பி. தெரிவித்தார்.
இதுதொடர்பாக குமரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நவம்பர் 8-ந் தேதி நடைபெற இருந்தது. அது தற்போது டிசம்பர் 13-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விழாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். அதற்கேற்ற வகையில் விழா ஏற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கிராமம், நகரந்தோறும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பேனர்கள், கட்-அவுட்கள் வைக்கப்பட்டு மக்களுக்கு விழாவை தெரியப்படுத்த வேண்டும்.
இந்த விழாவை நடத்த நமக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதி அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்பட வேண்டும். விழாவுக்கான விழா குழுக்கள் விரைவில் அமைக்கப்பட்டு கட்சியினருக்கு தெரிவிக்கப்படும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை வரவேற்கும் விதமாக நகர எல்லைகள் அனைத்திலும் கேரள பாரம்பரியப்படி வாழை, உலத்திக்குலை போன்றவற்றால் தோரணங்கள் அமைக்கப்பட உள்ளன.
எனவே எம்.ஜி.ஆரின் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு இந்த விழாவை தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் நடைபெற்றிராத வகையில் சிறப்பாக நடத்தி காட்ட உறுதியேற்று செயல்பட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகுமார் எம்.பி. பேசினார்.
கூட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் வக்கீல் ஞானசேகர், மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சந்தோஷ், நகர செயலாளர் சந்திரன், நிர்வாகிகள் கனகராஜ், மேரி கமலாபாய், வக்கீல் விக்னேஷ் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.