லாரி மோதி தொழிலாளி பலி நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது பரிதாபம்

மேல்புறத்தில் லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் நண்பருடன் சென்ற தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-10-17 22:15 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு, வாழவிளைகுழியை சேர்ந்தவர் எட்வின் ஜெயசிங் (வயது37), தொழிலாளி. இவர் மார்த்தாண்டத்தில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் அனில்குமார் (34). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மார்த்தாண்டத்தில் இருந்து பாகோடுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை அனில்குமார் ஓட்டி சென்றார். எட்வின் ஜெயசிங் பின்னால் அமர்ந்திருந்தார்.

மேல்புறத்தில் சென்றபோது, அந்த வழியாக வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் நண்பர்கள் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பரிதாப சாவு

அங்கு சிகிச்சை பலனின்றி எட்வின் ஜெயசிங் பரிதாபமாக இறந்தார். அனில்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்