பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 6 பேர் காயம்

பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 6 பேர் காயம்;

Update: 2017-10-17 22:45 GMT
ஜீயபுரம்,

திருப்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூருக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அதே போன்று திருச்சியில் இருந்து ஒரு தனியார் பஸ் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்து. திருச்சி அருகே உள்ள முருங்கபேட்டையில் இரவு 9.30 மணிக்கு வந்த போது இரண்டு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் அரசு பஸ் டிரைவர் திண்டுக்கல்லை சேர்ந்த ரமேஷ் உள்பட பஸ்சில் பயணம் செய்த 6 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் நேற்று இரவு கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. 

மேலும் செய்திகள்