பி.ஏ.பி. கால்வாய்க்குள் கார் பாய்ந்து விபத்து: தேடப்பட்டு வந்த நாமக்கல் என்ஜினீயர் பிணமாக மீட்பு
பொங்கலூர் அருகே நேற்று முன்தினம் பி.ஏ.பி. கால்வாய்க்குள் கார் பாய்ந்து விபத்து ஏற்பட்டத்தில் என்ஜினீயர்கள் 3 பேர் உயிரிழந்தனர். தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட நாமக்கல் என்ஜினீயரை பிணமாக காங்கேயம் அருகே போலீசார் நேற்று மீட்டனர்.
பொங்கலூர்,
கோவை ஷோபா டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த கோவை வீரகேரளத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 30).சிவில் என்ஜினீயர். இவரும், இவரது நண்பர்களான சிவில் என்ஜினீயர்கள் விஜயன்(35), பிரதீப்(34), சுதாகர்(29) அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் அன்பழகன்(35) ஆகியோர் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் சார்பில் கொடைக்கானலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சுற்றுலா சென்றனர். பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் சுற்றுலாவை முடித்துக்கொண்டு தாராபுரம், குண்டடம் வழியாக கோவைக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். காரை மாரியப்பன் ஓட்டினார்.
இரவு சுமார் 7 மணியளவில் பொங்கலூரை அடுத்த கள்ளிப்பாளையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கார் பி.ஏ.பி. கால்வாய்க்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் காரின் இடது பக்க பின் இருக்கையில் அமர்ந்திருந்த அன்பழகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கால்வாய்க்குள் இருந்து காரை வெளியே எடுத்து பார்த்ததில் காருக்குள் மாரியப்பன், விஜயன், பிரதீப் ஆகியோர் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
ஆனால் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மங்களபுரத்தை சேர்ந்த சுதாகர் மட்டும் காருக்குள் இல்லாததால் அவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும், அவரது உடல் கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் காணாமல் போன சுதாகரின் உடலை கடந்த 2 நாட்களாக விபத்து நடந்த இடத்தில் இருந்து கால்வாய் செல்லும் பகுதி முழுவதும் சுதாகர் பணிபுரிந்த நிறுவனத்தின் ஊழியர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடினார்கள்.
தீவிர தேடுதலுக்கு பின்னர் சுதாகரின் உடல் நேற்று காங்கேயம் அருகே பி.ஏ.பி. கால்வாயில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் மற்றும் அவரின் உறவினர்கள் அது சுதாகரின் உடல்தான் என்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து சுதாகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவைக்கு எடுத்துச்சென்றனர். கடந்த 2 நாட்களாக சுதாகரின் உடல் தண்ணீரிலேயே இருந்ததால் சிறிது அழுகிய நிலையில் காணப்பட்டது.