தஞ்சையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 87 மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது
தஞ்சை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 87 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நேரடி மேற்பார்வையில் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த தனிப்பிரிவுக்கு தஞ்சையை அடுத்த மாப்பிள்ளைநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் இரவு மாப்பிள்ளைநாயக்கன்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து மது விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
உடனே அந்த வீட்டிற்குள் அதிரடியாக தனிப்படை போலீசார் நுழைந்து சோதனை நடத்தியபோது அங்கு ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 87 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தஞ்சை மாதாக்கோட்டை பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ்(வயது60), அண்ணாநகரை சேர்ந்த அருளானந்தசாமி(56) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
அதில், ராணுவ கேண்டினில் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படும் மதுபாட்டில்களை இருவரும் ரூ.300-க்கு வாங்கி வந்து வெளியில் ரூ.700 வரை விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.