குளத்தில் செத்து மிதந்த மீன்கள் காரணம் என்ன? போலீசார் விசாரணை

விருத்தாசலம் அருகே குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன. இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-10-17 22:45 GMT
கம்மாபுரம்,

விருத்தாசலம் அருகே உள்ளது கோ.மாவிடந்தல் கிராமம். இங்கு சுமார் 5 ஏக்கரில் சின்னம்மாள் குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மீன் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது தனி நபர்கள் யாரும் குளத்தில் மீன்கள் வளர்க்கவில்லை. இருப்பினும், அந்த குளத்தில் ஏராளமான மீன்கள் வளர்ந்து வந்தன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் குளத்தில் உள்ள மீன்கள் திடீரென செத்து மிதந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீச தொடங்கியது. இதை அறிந்த கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணை

மேலும், கம்மாபுரம் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நேரில் சென்று குளத்தை பார்வையிட்டனர். பின்னர், கால்நடை துறை மருத்துவக்குழுவினர் குளத்தின் தண்ணீர் மாதிரியையும், இறந்த 2 மீன்களையும் எடுத்து ஆய்வுக்காக விழுப்புரம் தடயவியல் துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

மீன்கள் செத்ததற்கு குளத்தில் விஷம் கலக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ஆய்வின் முடிவுக்கு பிறகு உண்மை நிலவரம் தெரியவரும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்