கடைவீதியில் ஜவுளிகள் வாங்க அலைமோதிய பொதுமக்கள் கூட்டம் போக்குவரத்து ஸ்தம்பித்தது
ஈரோடு கடைவீதியில் ஜவுளிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ஈரோடு,
தீபாவளி பண்டிகை இன்று (புதன்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜவுளிகளை வாங்க கடந்த 3 நாட்களாக ஈரோடு மாநகர் பகுதியில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடைவீதியில் நேற்று கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ஜவுளிக்கடைகள் அதிகமாக உள்ள இடங்களான கனி மார்க்கெட், நேதாஜிரோடு, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, ஈஸ்வரன்கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் மக்கள் நடந்து செல்வதற்கே திணறினார்கள். இதனால் பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து மணிக்கூண்டு வழியாகவும், ஆர்.கே.வி.ரோடு வழியாகவும் எந்தவொரு வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. புதிய ஆடைகளை வாங்க மாவட்டம் முழுவதும் இருந்து ஈரோட்டிற்கு பொதுமக்கள் குவிந்தனர். இதனால் ஈரோடு மாநகரமே எங்கு பார்த்தாலும் மக்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருந்தது. சாலையோரம் மக்கள் திரண்டு செல்வதை பார்த்தபோது ஈரோடு விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
ஜவுளிகள் மட்டுமின்றி செல்போன், டி.வி., வாசிங் மெஷின், பர்னிச்சர் பொருட்கள் போன்றவற்றையும் பொதுமக்கள் அதிகமாக வாங்கினார்கள். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கோபுரங்களின் மீது ஏறி நின்று பொதுமக்களை கண்காணித்தனர். மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் ஈரோடு காந்திஜி ரோடு வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் பிரப்ரோடு வழியாக திருப்பி விடப்பட்டன ஏற்கனவே பிரப்ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.
போக்குவரத்து ஸ்தம்பித்தது
ஈரோடு மாநகரின் முக்கிய சந்திப்பாக விளங்கும் எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவில் கடுமையான போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதேபோல் ஈரோடு மேட்டூர்ரோடு, பெருந்துறை ரோடு, பிரப்ரோடு, ஈ.வி.என்.ரோடு, சத்திரோடு ஆகிய இடங்களில் வாகனங்கள் வழிநெடுக நீண்ட தூரம் நின்றன.
சவிதா சிக்னல் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் நாச்சியப்பா வீதி முழுவதும் பஸ்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன.
இதனால் ஈரோடு பஸ் நிலையத்திலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே ஈரோடு மாநகரம் முழுவதும் நேற்று போக்குவரத்து ஸ்தம்பித்தது.