டிராக்டர் மீது வேன் மோதல்; டிரைவர் உள்பட 6 பேர் படுகாயம்

அவினாசி அருகே டிராக்டர் மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-10-17 23:00 GMT
அவினாசி,

அவினாசியை அடுத்த கோவை மெயின்ரோடு நாதம்பாளையம் பிரிவு அருகே உள்ள புற்களை அப்புறப்படுத்துவதற்காக தொழிலாளர்கள் ஒரு டிராக்டரில் வந்து இறங்கி டிராக்டரின் அருகில் சாலையோரமாக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது ஈரோட்டிலிருந்து ஒரு வேன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. திடீரென எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த அந்த வேன், டிராக்டர் மீது மோதியது.

இதில் டிராக்டர் ரோட்டில் கவிழ்ந்தது. அத்துடன் டிராக்டரின் அருகில் நின்றிருந்த டிராக்டர் டிரைவர் கொண்டப்பன் (வயது 51), சப்னா, சுகுமதி, பிளரி, பிரா, மாதுரி ஆகிய 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக காயம்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அதில் சப்னா, பிளரி, மாதுரி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்