நர்சு எனக்கூறி மயக்க மாத்திரை கொடுத்து மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி ‘அபேஸ்’
நர்சு எனக்கூறி மயக்க மாத்திரையை கொடுத்து மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை நூதன முறையில் ‘அபேஸ்’ செய்துவிட்டு தப்பியோடிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.;
திருப்பூர்,
திருப்பூர் கே.டி.சி. பள்ளி ரோடு அய்யன் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ராஜாத்தியம்மாள் (வயது 55). இவர் சம்பவத்தன்று திருப்பூரில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இதன் பின்னர் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து மினி பஸ்சில் வீட்டிற்கு திரும்ப வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது அருகில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இருந்தார்.
அந்த பெண் ராஜாத்தியம்மாளிடம் பேச்சுக்கொடுத்தார். அப்போது அய்யன் நகரில் தனக்கு உறவினர் உள்ளதாகவும், அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த பெண் ராஜாத்தியம்மாளுடன் கே.டி.சி. பள்ளி பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளார்.
மூட்டு வலிக்கு மாத்திரை
இந்த நிலையில் அந்த பெண் தனது உறவினருக்கு போன் செய்தேன். அவர் வேலை காரணமாக வெளியே சென்று விட்டார். வீட்டிற்கு வருவதற்கு இன்னும் சிறிதுநேரம் ஆகும். அதுவரை உங்களது வீட்டில் இருந்து விட்டு செல்கிறேன் எனக்கேட்டுள் ளார். இதற்கு ராஜாத்தியம்மாள் சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் அந்த பெண் தான் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜாத்தியம்மாள் தனக்கு மூட்டு வலி இருப்பதாக தெரிவித்தார். உடனே அந்த பெண் மூட்டு வலிக்கு ராஜாத்தியம்மாளுக்கு சில மாத்திரைகளை கொடுத்துள்ளார்.
3 பவுன் சங்கிலி அபேஸ்
இதனை அவர் சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் ராஜாத்தியம்மாள் நீண்ட நேரம் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு, சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
இதன் பின்னர் மயக்கம் தெளிந்த ராஜாத்தியம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது தான் அந்த பெண் மூட்டு வலி மாத்திரைக்கு பதிலாக மயக்க மாத்திரை கொடுத்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து திருப்பூர் மத்திய போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மூதாட்டியிடம் நூதன முறையில் 3 பவுன் சங்கிலியை அபேஸ் செய்துவிட்டு தப்பியோடிய பெண்ணை தேடி வருகிறார்கள்.