மேலப்பாளையத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்

மேலப்பாளையத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-10-17 21:00 GMT

நெல்லை,

மேலப்பாளையத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொழிலாளி தற்கொலை மிரட்டல்

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40) கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன.

சுரேஷ் குடித்துவிட்டு வீட்டு செலவுக்கு பணம் கொடுப்பது கிடையாது. இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க பணம் இல்லாததால் மனம் உடைந்த சுரேஷ் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்துவிட்டு தான் தற்கொலை செய்யப்போவதாக கூறிவிட்டு வெளியே சென்றார். ஊருக்கு அருகில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து செல்போன் கோபுரத்தில் ஏறி நின்ற சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர் தனக்கு தீபாவளி செலவுக்கு பணம் தந்தால் தான் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்குவதாக கூறினார். அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கும் போதே தீயணைப்பு படை வீரர்கள் லாவகமாக செயல்பட்டு சுரேசை மீட்டு செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறக்கி கொண்டு வந்தனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பினார்கள். செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்