அ.தி.மு.க. 46–வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை
தூத்துக்குடியில் அ.தி.மு.க. 46–வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் அ.தி.மு.க. 46–வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஆண்டு விழாதூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. 46–வது ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாவட்ட அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உருவப்படங்களுக்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி, மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் என்.சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மோகன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட இணை செயலாளர் தங்கமாரியம்மாள், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் யு.எஸ்.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொடியேற்று விழாதூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் உள்ள எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு அ.தி.மு.க. தொடக்க விழாவையொட்டி கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் ஏசாதுரை தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு பகுதி கழக செயலாளர் பொன்ராஜ், மேற்கு பகுதி கழக துணை செயலாளர் கணேசன், கிழக்கு பகுதி கழக தலைவர் ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இலக்கியணி செயலாளர் ஏ.நடராஜன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்து, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் வீரபாகு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர்கள் சத்யா லட்சுமணன், ஜோதிமணி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் தனராஜ், மாவட்ட மகளிரணி செரினா பாக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குணசேகரன் நன்றி கூறினார்.
அ.தி.மு.க. அம்மா அணிதூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் அ.தி.மு.க. தொடக்க விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாவட்ட செயலாளர் ஹென்றி தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணியினர் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ரமேஷ், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் நம்பிராஜன், ஒன்றிய செயலாளர்கள் அம்மன் டி.நாராயணன், பொன்ராஜ், முருகன், பிரபாகர் தனராஜ், பால்துரை, பகுதி செயலாளர் எட்வின்பாண்டியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் கில்பர், மாவட்ட துணை செயலாளர் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.