டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் அரசு மருத்துவமனை டீன் பேட்டி
டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று மதுரை அரசு மருத்துவமனை டீன் கூறினார்.
மதுரை,
தமிழகம் முழுவதும் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து செல்கின்றனர். டெங்கு பிரச்சினை தமிழகத்தில் தலைவிரித்து ஆடுவதால் தமிழக அரசு, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்திலும் டெங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சலுக்கும் சிகிச்சை அளிக்க 250 படுக்கை வசதி கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து டீன் மருதுபாண்டியன் பேட்டியின் போது கூறியதாவது, மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து வசதிகளும் கொண்ட சிறப்பு வார்டு தற்போது செயல்பட்டு வருகிறது. சிறப்பு வார்டில் புதிதாக 100 கட்டில்கள், மெத்தைகள், கொசுவலைகள் தயார் நிலையில் உள்ளன. தேவைப்பட்டால் கூடுதலாக கட்டில்கள் உள்ளிட்டவை வாங்க ஏற்பாடு செய்யப்படும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் அருகில் உள்ள மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும். சுயமாக மருந்துகளை உட்கொள்வது நல்லதல்ல. மருத்துவர்களின் ஆலோசனைப்படியே மருந்து, மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். காய்ச்சல் 2, 3 நாட்களில் சரியானாலும் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
இதனால் காய்ச்சலின் தீவிரத்தை கட்டுப்படுத்தலாம். காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தால் அரசு மருத்துவமனைக்கு வந்து முறைப்படி ரத்தப்பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொண்டால் காய்ச்சலை உடனடியாக குணப்படுத்தலாம். ஆகையால் பொதுமக்கள் டெங்கு காய்ச்சலுக்கு பீதியடைய வேண்டாம். மேலும் வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். பாத்திரங்களை பயன்படுத்திய பிறகு அதனை உடனுக்குடன் சுத்தம் செய்து வைக்க வேண்டும். பிளாஸ்டிக் வாளிகள், கப்புகள் உள்ளிட்டவைகளில் தண்ணீர் இருந்தால் அதனை மூடி வைக்க வேண்டும்.
சுத்தமான தண்ணீரில் ஒரு ஏடிஎஸ் கொசு 1,500 முட்டைகளை இடும். இதனால் கொசுக்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் பகலில் இருக்கும் போது கொசுக்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். பகல் நேரத்தில் தூங்குவோர் கண்டிப்பாக கொசுவலைக்குள் தூங்குவது நல்லது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.