மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் அமைச்சர் ஷாஜகான் பரிசு வழங்கினார்

பள்ளி மாணவ, மாணவிகளுக்காக புதுவை ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்தப்பட்டன.

Update: 2017-10-16 23:01 GMT

புதுச்சேரி,

இதில் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் 290 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சுப்பையா நகர் மங்கலட்சுமி திருமண நிலையத்தில் பரிசளிப்பு விழா நடந்தது.

விழாவுக்கு சங்க தலைவர் திருவேங்கடம் தலைமை தாங்கினார். விழாவில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ஷாஜகான் பரிசுகளை வழங்கினார். அப்போது அகில இந்திய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பிரவீனா, லோகேஸ்வரன், வெள்ளிப்பதக்கம் வென்ற சுபிக்ஷா, அப்துல் காலிக், அஸ்வின் குமார், மெர்லின் தனம் அற்புதம், வெண்கலப்பதக்கம் வென்ற பிரனீதா, விஸ்வதா, பியூஷா தரணி ஆகியோருக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சிவா, ஜெயமூர்த்தி, எம்.என்.ஆர்.பாலன், பளுதூக்கும் சங்க துணைத்தலைவர் விக்டர் ஜெகநாதன் அம்புரோஸ், சங்க நிர்வாகிகள் ராஜேஷ் ஜெயின், தாமஸ், பாஸ்கரன், விஸ்வேஸ்வர மூர்த்தி, பாலசுப்ரமணியம், சரவணன், கோவிந்தராஜ், செந்தில்குமார், அமரேந்தர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சங்க பொதுச்செயலாளர் பிரசாத்ராவ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்