டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
பெண்ணாடம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம நிர்வாக அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
விருத்தாசலம்,
பெண்ணாடம் அருகே உள்ளது மாளிகைகோட்டம். இந்த கிராமத்தில் விளைநிலங்கள் உள்ள பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட அதிகாரிகள் இடம் தேர்வு செய்தனர். மேலும், அந்த கடையை திறக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வந்தனர்.
இதற்கு மாளிகைகோட்டம், துறையூர், சின்னகொசப்பள்ளம், அரியராவி ஆகிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாளிகைகோட்டம் கிராம நிர்வாக அலுவலகத்தை மேற்கண்ட 4 கிராம மக்கள் ஒன்று திரண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மாளிகைகோட்டத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இது பற்றி தகவல் அறிந்த திட்டக்குடி தாசில்தார் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சாந்தி, பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனை ஏற்ற மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் திடீரென போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.