மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் கபிலர் நகரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 32). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயசுந்தரி (29). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

Update: 2017-10-16 22:45 GMT

திருவள்ளூர்,

கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் ஜெயசுந்தரி கோபித்துக்கொண்டு தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த தாமோதரன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மணவாளநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே உள்ள கசவநல்லாத்தூரை சேர்ந்த கோபி (60) தீராத வயிற்று வலியால் மனம் உடைந்து அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்றுவிட்டார். சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி கடம்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்