பட்டதாரி என்ஜினீயர்களுக்கு 192 பணிகள்

மத்திய அரசு நிறுவனத்தில் பட்டதாரி என்ஜினீயர்களுக்கு 192 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2017-10-16 07:09 GMT
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) . ராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தற்போது டெபுடி என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 192 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 96 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 52 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 29 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 15 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு..

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 1-10-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி:

என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன், மெக்கானிக்கல் போன்ற பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு இதில் விதிவிலக்கு அனுமதிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 25-10-2017-ந்தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bel india.ocm என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்