இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை
ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தில் ‘நான்-எக்சிகியூட்டிவ்’ தரத்திலான ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் பணிக்கு 45 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.;
இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ‘நான்-எக்சிகியூட்டிவ்’ தரத்திலான ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் பணிக்கு 45 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கெமிக்கல், ரீபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்புகள், பி.எஸ்சி. அறிவியல் படிப்புகள் படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. விண்ணப்பதாரர்கள் 31-10-2017 தேதியில் 18 முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், அதை கணினிப் பிரதி எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு 7-11-2017-க்குள் சென்றடைய வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.io-cl.com/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.