மாணவ-மாணவிகளுக்கு இலவச விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்
மாணவ-மாணவிகளுக்கு இலவச விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கடத்தூர்,
கோபி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். திருப்பூர் சத்தியபாமா எம்.பி. முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்று பேசினார். விழாவில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, பிளஸ்-2 படித்து முடித்த 13 ஆயிரத்து 577 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகளை வழங்கி பேசியதாவது:-
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை டெண்டர் வைத்து மடிக்கணினி வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இனி வரும் ஆண்டுகளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பள்ளியில் படிக்கும் போதே விலையில்லா மடிகணினிகள் வழங்கப்படும்.
தற்போது பொதுத் தேர்வு மையங்கள் 20, 22 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. அதை மாற்றி 10 கி.மீ. தூரத்திற்குள் பொதுத்தேர்வு மையங்கள் இருக்கும். இதன் மூலம் மாணவ-மாணவிகள் மன உளைச்சல் இல்லாமல் பொதுத்தேர்வை சிறப்பாக எழுத முடியும். தற்போது உள்ளதை விட 1,000 மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும். இந்த கல்வியாண்டு முதல் இது செயல்படுத்தப்படும். மாணவ-மாணவிகளுக்கு இலவச விபத்து காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த இந்த அரசு முனைப்புடன் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜன், தாசில்தார் பூபதி, சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்துரவிச்சந்திரன், பள்ளி தாளாளர் கருப்பணன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி என்கிற சுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் மயில்சாமி, கூட்டுறவு சங்க தலைவர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஈரோடு திண்டலில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோவில் பூசாரி களுக்கு பூஜை பொருட்கள் வழங்கினார்.பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது சிறிய கோவில்களுக்கு தேவையான பூஜை பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 420 கோவில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் தொடங்க வேண்டும் என்பதற்காக ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடங்களில் தற்போது பழுது ஏற்பட்டு உள்ளது. இதை சீரமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்களும் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கட்டிடங்கள் பழுது பார்த்து சீரமைக்க முடியாத நிலையில் இருந்தால் அதை இடித்து விட்டு மீண்டும் புதிய கட்டிங்களை கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும்.