எழுமலை, பாலமேட்டில் டெங்கு விழிப்புணர்வு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
எழுமலை, பாலமேட்டில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
உசிலம்பட்டி,
எழுமலையில் வடமேற்கு ரோட்டரி சங்கம், பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பேரூராட்சி ஆகியவற்றின் சார்பில் டெங்கு ஒழிப்பு கருத்தரங்கம் நடந்தது. இதையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் எழுமலை பஸ்நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பல்லுக்கடை மைதானத்தை அடைந்தது.
இதில் மாணவர்கள் டெங்கு குறித்தான விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி சென்றனர். நிகழ்ச்சியை வடமேற்கு ரோட்டரி சங்கத்தை சேர்ந்த மனோகர், யத்தினேஷ் பட் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பள்ளி தாளாளர் பொன்.கருணாநிதி, ரோட்டரி சங்க நிர்வாகி பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் எழுமலை பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தாசில்தார் சிவக்குமார் செய்திருந்தார். இதில் பள்ளி நிர்வாகி வரதராஜன், பள்ளி முதல்வர் ஆறுமுகசுந்தரி, ஆசிரியர்கள், பேரூராட்சி அலுவலர்கள் பரசிவம், நாகராஜ், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாலமேட்டில் தே.மு.தி.க. சார்பில் டெங்கு தடுப்பு நட வடிக்கையாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சிவசத்தியசீலன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர்கள் உதயகுமார், தர்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாலசந்திரன் முகாமை தொடங்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள், சிவசண்முகம், பாலமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி பஸ் நிறுத்தத்தில் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கணபதி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர்கள் கருப்புவைரம், அருள், அவைத் தலைவர் தனபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் சந்திரா கலந்து கொண்டு நிலவேம்பு கசாயம் வழங்கினார். இதில் பகுதி செயலாளர் சங்கிலி, ஒன்றிய தலைவர் தெய்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.