சேலம் மாவட்டத்தில் தொடர் மழை: அரசு பள்ளியை வெள்ளம் சூழ்ந்தது
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தலைவாசல் அருகே அரசு பள்ளியை மழை வெள்ளம் சூழ்ந்தது. ஆத்தூர் அருகே மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்து வந்த மழையால் அம்மாபேட்டையில் உள்ள குமரகிரி ஏரி நிரம்பியது. கடந்த வாரம் ஏரியின் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறியது. இந்த தண்ணீர் ராஜவாய்க்கால் வழியாக பச்சப்பட்டி, அசோக்நகர், மாருதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.
இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். 2 நாட்களுக்கு பின் தண்ணீர் வடிந்தபின்னர் மீண்டும் மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.
இந்தநிலையில், சேலத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக குமரகிரி ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்தது. ராஜவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளால் மீண்டும் பச்சப்பட்டி பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அப்பகுதி மக்கள், தங்களது வீடுகளை பூட்டிவிட்டு உறவினர் வீடுகளுக்கு சென்றனர். சிலர் விடிய, விடிய தூங்காமல் வீட்டின் மொட்டை மாடியில் தவித்தனர்.
நேற்று காலையிலும் தண்ணீர் வடியாமல் வீதிகளில் தேங்கி நின்றதை காணமுடிந்தது. இதுபற்றி அறிந்த மாநகராட்சி செயற்பொறியாளர் காமராஜ், சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சக்திவேல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பச்சப்பட்டி பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள், கால்வாய்களை பொக்லைன் எந்திரம் மூலம் தூர் வாரி தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரனும் அங்கு சென்று தண்ணீர் புகுந்த வீடுகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு உதவினார்.
பள்ளப்பட்டி சின்னேரிவயல்காடு, பெரமனூர் கோவிந்தகவுண்டர் தோட்டம், மணக்காடு ராஜகணபதி நகர், கிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீருடன் மழைநீர் தெருக்களில் தேங்கி நின்றதை காணமுடிந்தது.
தலைவாசல் அடுத்து சதாசிவபுரம் ஊராட்சி உள்ளது. இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 350 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த மாணவ-மாணவிகள் சதாசிவபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இந்த பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். பள்ளியை மழைவெள்ளம் சூழ்ந்து நிற்பதால் மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள். கழிவறையையும் மழைநீர் சூழ்ந்து இருப்பதால் கடும் சிரமப்படுகிறார்கள். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதால், மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதேபோல் நாவலூர் ஊராட்சியில் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை சுற்றி மழைநீர் குட்டைபோல் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
ஆத்தூர் நகரசபை காந்திநகர் பகுதியில் குடிநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ஆத்தூரின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த பகுதியில் மழை பெய்தது. அப்போது நீர்தேக்க தொட்டி அருகே நின்ற புங்கன் மரம் முறிந்து அருகில் இருந்த இரண்டு மின்கம்பங்கள் மீது விழுந்தது. இதில் அந்த மின்கம்பங்கள் உடைந்து சரிந்து விழுந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நகரசபை பணியாளர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து, முறிந்த மரம் மற்றும் உடைந்த மின் கம்பங்களை அகற்றி சீரமைத்தனர்.