திண்டுக்கல்லில் பரபரப்பு: ரேஷன் பொருள் ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
திண்டுக்கல் நாகல்நகரில் ரேஷன் பொருட்கள் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு கோதுமை, அரிசி உள்ளிட்ட பொருட்கள் சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பொருட்கள் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள குடோன்களில் இறக்கி வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதையொட்டி, திண்டுக்கல் நாகல்நகர் ரெயில்வே மேம்பாலம் வழியாக குடோன்களில் இருந்து சரக்குகளை ஏற்றுவதற்காக 100-க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும், லாரிகள் அதிவேகத்தில் செல்வதால் விபத்துகள் நடந்து வருவதாக ராஜலட்சுமிநகர் மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதையடுத்து, குடோனை தாமரைப்பாடி அல்லது வடமதுரைக்கு மாற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று காலை சுமார் 50 லாரிகள் குடோனில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ராஜலட்சுமி நகர் அருகே லாரிகளை சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த லாரிகளின் உரிமையாளர்கள் அங்கு வந்தனர். அவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த நகர் தெற்கு போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.