நூடுல்ஸ் ரசிகர்!

ஜப்பானில் வசிக்கும் 55 வயது டோஷியோ யமமோடோவுக்கு நூடுல்ஸ் சாப்பிடுவதில் கொள்ளை பிரியம்.

Update: 2017-10-15 09:00 GMT
ப்பானில் வசிக்கும் 55 வயது டோஷியோ யமமோடோவுக்கு நூடுல்ஸ் சாப்பிடுவதில் கொள்ளை பிரியம். இதுவரை 40 நாடுகளில் தயாரிக்கப்பட்டிருக்கும் 5,500 வகை நூடுல்ஸ்களை சுவைத்திருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளாக நூடுல்ஸ் சாப்பிட்ட அனுபவங்களை, இணையதளத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்தந்த நாடுகளில் நூடுல்ஸ் எப்படி அறிமுகமானது, எப்படிச் சமைக்க வேண்டும், சோடியம் எவ்வளவு இருக்கிறது, கலோரிகள் எவ்வளவு? போன்ற விஷயங்களை எல்லாம் சுவாரசியமாக எழுதி வருகிறார். அதனால் இவரது இணையதளம் உலகம் முழுவதும் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது.

1996-ம் ஆண்டு முதல் இன்று வரை 14 லட்சம் பேர் இவரது இணைய தளத்தை பார்த்திருக்கிறார்கள். சிலர் தாங்கள் வசிக்கும் நாடுகளில் இருந்து நூடுல்ஸ்களை வாங்கி அன்பளிப்பாக டோஷியோவுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

“நான் ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போதே நூடுல்ஸ் சமைக்க ஆரம்பித்துவிட்டேன். அன்றிலிருந்து இன்று வரை நூடுல்ஸ் மேல் இருக்கும் ஆர்வம் சற்றும் குறையவில்லை. ஒவ்வொரு விதமான நூடுல்சையும் சமைத்து, சுவைத்த பிறகு மார்க் போடுவேன். மிகவும் அற்புதமான நூடுல்ஸாக இருந்தால் 4 நட்சத்திரங்கள் கொடுப்பேன். நான் என் தொழில் காரணமாக பல நாடுகளுக்கும் செல்ல வேண்டியிருக்கிறது.அங்கெல்லாம் நூடுல்ஸ்களை மறக்காமல் வாங்கி வந்துவிடுவேன்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை நூடுல்ஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நலன் பாதுகாக்கப்பட்டது. உடலுக்கு நன்மை தரக்கூடிய சுவையூட்டிகளை அதில் சேர்த்தனர். ஆனால் இன்று எல்லாமே வணிகமயமாகி விட்டது. வளர்ந்த நாடுகளில் கப் நூடுல்ஸ் பிரபலமாக இருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் பிரபலமாக இருக்கிறது. நூடுல்ஸ் வகைகளை ரசித்து, ருசித்து, எழுதவேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று விட்டேன். புத்தகங்கள் எழுதி வருகிறேன். இன்றும் வாரத்துக்கு 5 நாட்கள் நூடுல்ஸ்தான் சாப்பிடுகிறேன்” என்கிறார் டோஷியோ. 

மேலும் செய்திகள்