அறிவு.. அழகு.. குறும்பு..
செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கடந்து வீட்டின் அங்கமாகவே மாறிவிட்டன.
செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கடந்து வீட்டின் அங்கமாகவே மாறிவிட்டன. விதவிதமான தோற்றங்களையும், சுபாவங்களையும் கொண்ட நாய் இனங்களை வளர்ப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். அவைகளை அன்போடு அரவணைப்பதுடன், அலங்கரித்து அழகுப்படுத்தியும் பார்க்கிறார் கள். நாய்களின் அழகையும், அவற்றின் முகபாவங்களையும், நடையின் நளினங்களையும் ரசிப்பதோடு, அவைகளின் தனித்துவமிக்க செயல்பாடுகளையும் வெளிக்காண்பிக்கும் வகையில் நாய் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
சென்னை மதுரவாயல் சிவபார்வதி கார்டனில் நடந்த நாய் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சென்னை கெனைன் கிளப் சார்பில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், டாபர் மேன், பக், டெரியர், சைபீரியன் ஷஸ்கி, லேப்ராடர் ரெட்ரிவேர் போன்ற ஏராளமான இனங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. அவைகளை அழகுப் போட்டியில் பங்கேற்க அழைத்து வந்ததுபோல, நேர்த்தியாக சிகை அலங்காரம் செய்து அழகுப்படுத்திக் கொண்டுவந்தனர். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் பார்வையாளர்களை கவர்ந்தது.
அவைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. உரிமையாளர்களின் கட்டளைக்கு கீழ்ப் படிந்து நடத்தல், மோப்பம் பிடித்தல், கூர்ந்து கவனிக்கும் திறன் போன்றவற்றை மதிப்பீடு செய்து பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகள் நடந்தபோது சில நாய்களின் குறும்புத்தனங்கள் பார்வையாளர்களை ரசிக்கவைத்தன. மோப்ப சக்தியை அறிவதற்காக நடத்தப்பட்ட போட்டியில் சில நாய்கள் தடுமாறின. கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் கப்புக்குள் இருக்கும் பொருளை மோப்பம் பிடிக்க முடியாமல் அதனையே சுற்றி சுற்றி வந்தன. சில நாய்கள் கப்புகளுக்கு அருகில் சென்று படுத்துக்கொண்டன. உரிமையாளர்கள் உரக்க சப்தமிட்டும், அசைந்து கொடுக்காமல் மிரட்சியுடன் நின்ற நாய்களை பார்த்து பார்வையாளர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்கள். அவைகளின் குறும்பு தனங்களை பார்த்து கோஷமிட்டும், செல்போனில் படம் பிடித்தும் ரசித்தார்கள். கப்புகளை வாயால் கவ்விக்கொண்டு உரிமையாளர் களிடம் ஒப்படைக்கும் போட்டியில் பெரும்பாலான நாய்கள் தடு மாறின. கப்புகளை வாயால் முழுமையாக கவ்வ முடியாமல் அதனுடன் போராடியதை பார்த்து பார்வையாளர்கள் சிரித்தது, சில நாய்களுக்கு வெட்கத்தை ஏற்படுத்தியது. சில நாய்களின் சேட்டைகள் சிறுவர், சிறுமியர்களை குஷிப்படுத்தின.
நடப்பது, நிற்பது, ஓடுவது என நாய்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உரிமையாளர்கள் கொண்டு வந்ததற்கு ஏற்பவும் பரிசுகள் வழங்கப்பட்டன. உரிமையாளர்களை எந்த அளவிற்கு நாய்கள் புரிந்து கொண்டிருக்கிறது, நாய்க்கும் அவர்களுக்கும் இடையேயான உறவு எந்த அளவுக்கு இணக்கமாக அமைந் திருக்கிறது என்பதையும் அங்கே அறிய முடிந்தது.
கண்காட்சிக்கு வந்திருந்த சுமிதா சக்திவேலுவுக்கும், நாய்களுக்கும் இடையேயான பந்தம் 25 வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. சென்னை அயனாவரத்தில் குடும்பத்தோடு வசிக்கும் அவர் தான் வளர்க்கும் லேப்ராடர் ரெட்ரிவேர் வகை நாயுடன் போட்டியில் களம் இறங்கினார். அவர் சொல்கிறார்:
“சிறுவயதில் இருந்தே வீட்டில் நாய்களை வளர்த்து வருகிறோம். திருமணமான பிறகு புகுந்த வீட்டிலும் நாய்கள் வளர்க்கப்பட்டதால் எனக்கு அவைகளின் மீது பிரியம் அதிகமானது. என் கணவர் பல்வேறு வகையான நாய்களை வாங்கித் தந்தார். ஒவ்வொரு நாய்களும் ஒவ்வொருவிதமான சுபாவங்களை கொண்டவையாக இருந்தன. அவைகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஓய்வு நேரத்தை செலவிட்டேன். அவைகளும் என்னுடன் நெருங்கிப் பழகிவிட்டன. அதனால் நாய்களை வளர்ப்பது பிடித்தமான பொழுதுபோக்காகவே மாறிவிட்டது.
நாங்கள் 10-க்கும் மேற்பட்ட நாய் இனங்களை வளர்த்திருக்கிறோம். அவைகளுள் இப்போது வளர்க்கும் லேப்ராடர் இன நாய்தான் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இந்த நாய் நம் சொல்லுக்கு உடனே கீழ்படிந்து நடக்கும். நாம் எது சொன்னாலும் உடனே அதை புரிந்து கொண்டு செயலில் இறங்கிவிடும். அன்பாக பழகும். அதன் செய்கைகள் பிடிக்காமல் நாம் கோபப்பட்டாலும் ஒருபோதும் ஆவேசமடைந்து கடிக்காது. வெளி ஆட்கள் யாரையும் எளிதில் வீட்டுக்குள் அனுமதிக்காது. அதிலும் வீட்டில் நான் மட்டும் தனியாக இருக்கிறேன் என்றால் குடும்ப நபர்களை தவிர வேறு ஆண்கள் யாரையும் வீட்டுக்குள் நுழையவே விடாது. பெண்கள் வந்தால் என் சைகையை புரிந்து கொண்டு அனுமதிக்கும். அதனால் வீட்டில் தனிமையில் இருந்தாலும் என்னால் பயமின்றி இருக்க முடிகிறது. அதற்கேற்ப பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம்.
எங்கள் நாய் சினிமாவிலும் நடித்திருக்கிறது. கண்காட்சிகளில் பங்கேற்பதன் மூலம் மற்றவர்கள் நாய்களை எப்படி வளர்க்கிறார்கள், அவைகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை என்னால் தெரிந்துகொள்ள முடிகிறது. இணைய தளங்களில் நாய்கள் செய்யும் சாகச வீடியோக்களை பார்க்கும்போது, அதுபோல் நம் நாயும் செயல்பட வேண்டும் என்று ஆசைப்படுவேன். அதற்கும் பழக்கிக்கொண்டிருக்கிறேன்” என்கிறார்.
கண்காட்சியில் இடம்பெற்ற நாய் இனங்களுள் நமது உள்ளூர் இனமான ராஜபாளையம் நாய்கள் சிறுவர்களை வெகுவாக கவர்ந்தன. பால் போன்ற வெண்மை நிற உடலையும், அழகிய வெளிர் சிவப்பு நிற மூக்கையும், நாக்கையும் கொண்ட ராஜபாளையம் நாய்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு சிறுவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டினர். அந்த நாய்களை வளர்த்துவரும் குடியாத்தத்தை சேர்ந்த நித்தியானந்தன் சொல்கிறார்:
“தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் ராஜபாளையம் இன நாய்கள், எஜமானர்களுக்கு மிகுந்த விசுவாசம் காட்டுபவை. அவைகளின் கண்களுக்கு தென்படும் எதை பிடிக்க சொன்னாலும் இமைக்கும் நேரத்தில் ஓடோடிச் சென்று கவ்விக்கொண்டு வந்துவிடும். எந்தமாதிரியான பருவநிலை மாற்றங்களுக்கும் தன்னை தயார்படுத்திக்கொள்ளும். நமது நாட்டின் பருவகால நிலைக்கு இந்தவகை நாட்டு நாய்கள் வளர்ப்பதே சிறந்தது. இவைகளுக்கான பராமரிப்பு செலவும் குறைவு. மேற்கத்திய கலாசார மோகத்தால் வெளிநாட்டு வகை நாய்களை வளர்ப்பதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். குளிர் பிரதேசத்தில் வாழும்தன்மை கொண்ட அவைகளை அதற்கேற்ப பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகிவிடும். அவைகளிடமிருந்து நமக்கும் தொற்றுநோய்கள் பரவி விடக்கூடும்.
எங்கள் நாய் இறைச்சி வகைகளுடன் அரிசி சாதத்தையும் விரும்பி சாப்பிடும். நாங்கள் 40 வருடங்களாக ராஜபாளையம் நாய்களை வளர்த்து வருகிறோம். அவைகளை பழக்கப்படுத்துவதும், புரிந்து கொள்வதும் எளிது. எப்போதும் நம்மை சுற்றியே வரும். நம் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கும்” என்கிறார்.
ராஜேஸ்வரி-பிரபு தம்பதியர் கண்காட்சியில் பங்கேற்பதற்காகவே காரில் ஜெர்மன் ஷெப்பர்டு இன நாயுடன் ஊட்டியில் இருந்து வந்திருந்தார்கள். நாய் வளர்ப்பு அனுபவம் குறித்து ராஜேஸ்வரி சொல்வதை கேட்போம்.
“நாங்கள் எந்த ஊரில் கண்காட்சி நடந்தாலும் அங்கு நாயுடன் சென்றுவிடுவோம். அதை பார்த்து நிறைய பேர், ‘அவ்வளவு தூரத்தில் இருந்தா கண்காட்சிக்கு வருகிறீர்கள்?’ என்று ஆச்சரியமாக கேட்பார்கள். எங்களை பொருத்தவரை நாய்களுக்கு செலவு செய்வதை குடும்ப செலவுகளில் ஒன்றாகவே கருதுகிறோம். போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. மற்ற நாய்களின் செயல்பாடுகளை கவனித்து, அதற்கு ஈடாக எங்கள் நாயை பழக்கப்படுத்தி வருகிறோம். இந்த நாய்க்கு மட்டுமே தினமும் இரண்டாயிரம் ரூபாய் வரை செலவு செய்கிறோம். இறைச்சி வகைகளை விரும்பி சாப்பிடும் என்பதால் செலவு தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. வீட்டில் இருந்தால் நாயே எங்கள் முழுநேர பொழுதுபோக்கில் இடம்பிடித்துவிடும். எனினும் அதனை வளர்ப்பதற்கு சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனை தூய்மையாக பராமரிக்க வேண்டும். அது வசிக்கும் இடத்தையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு நோய் பாதிப்புக்கு ஆளாகிவிடும். காலையும், மாலையும் அதற்கு போதுமான பயிற்சிகளை வழங்க வேண்டியிருக்கிறது. நடப்பதற்கு, ஓடுவதற்கு பழக்கப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சோம்பேறியாகி விடும்.
நாங்கள் சொல்வதை மட்டும்தான் இது கேட்கும். எங்கள் கட்டளைக்கு மட்டுமே கீழ்ப்படியும். ஆனால், மற்றவர்கள் சீண்டினாலும் எளிதில் உணர்ச்சி வசப்படாது. நாங்கள் கட்டளையிட்டால்தான் அது தாக்கும். எனினும் பாதுகாப்பு விஷயத்தில் விழிப்பாகவே இருக்கும். வீட்டிற்கு யாராவது வந்தால் முதலில் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும். அதன் மூலமே அவர்களின் நோக்கத்தை யூகித்துவிடும். அதற்கேற்ப செயல்பட்டு வீட்டில் உள்ள வர்களை உஷார்படுத்தும்” என்றார்.
ஒரே இடத்தில் ஏராளமான நாய்கள் அறிவு.. அழகு.. குறும்பால் அனைவரையும் கவர்ந்தது, கண்கொள்ளாகாட்சி!