சாலையில் நாற்று நடும் போராட்டம்

சாலையில் நாற்று நடும் போராட்டம்

Update: 2017-10-14 22:45 GMT
மதுரை,

மதுரை மாநகராட்சி 78-வது வார்டு பகுதியான மேலவாசல் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர், சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் உள்பட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகராட்சி நிர்வாகத்திடமும் மனு அளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் சிதம்பரம் தலைமையில் நேற்று அங்குள்ள சாலையில் தேங்கி கிடந்த நீரில் நாற்று நடும் போராட்டம் நடத்தி னர். இதில் கலந்து கொண்ட பெண்கள், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மக்கள் அதிகம் வசிக்கும் மேலவாசல் குடியிருப்பு பகுதிகளில் சாலை வசதியின்றி மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். டெங்கு காய்ச்சல் வருவதற்கு வழிவகுக்கும் வகையில் மாநகராட்சி செயல்படுகிறது. எனவே எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்