ரெயிலில் ரேஷன் அரிசி கடத்திய பெண் கைது

ரெயிலில் ரேஷன் அரிசி கடத்திய பெண் கைது

Update: 2017-10-14 22:30 GMT
ஈரோடு,

ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ற சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ரெயிலின் பொது பெட்டியில் ஈரோடு ரெயில்வே போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 5 மூட்டைகளில் இருந்த 100 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ரேஷன் அரிசியை கடத்தியது பவானியை சேர்ந்த ஷாலிமா (வயது 55) என்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து ஷாலிமாவை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்