மணலி புதுநகர் அய்யா வைகுண்ட சாமி கோவிலில் திருவிளக்கு பூஜை
மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
திருவொற்றியூர்,
மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி மாத தேர்திருவிழா மற்றும் திருஏடுவாசிப்பு கடந்த 6-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு, மாலை திருஏடுவாசிப்பு, இரவு அய்யா வைகுண்டர் அன்னவாகனம், கருடவாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் நேற்று முன்தினம் இரவு பெண்கள் கலந்து கொண்ட சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அய்யா குதிரை வாகனத்தில் பதிவலம் வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. காலை 11.30 மணியளவில் இலுப்பை, தேக்கு மரங்களால் செய்யப்பட்ட 36 அடி உயரம், 36 டன் எடை கொண்ட திருத்தேரில் அய்யா எழுந்தருள, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து மணலி புதுநகர் பகுதிகளில் வீதி உலா நடைபெறுகிறது.