சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு களப்பணி

சென்னையில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள், தன்னார்வ மற்றும் சுகாதார அமைப்புகள் சார்பில் டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Update: 2017-10-14 22:30 GMT
சென்னை,

சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், அத்தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் டெங்கு ஒழிப்பு களப்பணிகளில் ஈடுபட்டனர்.

சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கலைஞர் தெரு, கோதாமேடு, சலவைத்துறை, மேக்ஸ்லாண்டு, அண்ணாநகர், சலவையாளர் காலனி, அப்துல்ரசாக் தெரு போன்ற குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீர், தேக்கமடைந்த பொருட்கள், டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகள், தேங்காய் ஓடுகள் போன்ற கழிவுகளை அப்புறப்படுத்தினர்.

குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. பிளச்சிங் பவுடரும் தெளிக்கப்பட்டது. அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டது. வீடு வீடாக பொதுமக்களை தேடிச்சென்று நிலவேம்பு கசாயத்தை மா.சுப்பிரமணியன் தலைமையில் தி.மு.க.வினர் வழங்கினர். 

மேலும் செய்திகள்