தஞ்சை அருகே மர்ம காய்ச்சலுக்கு தனியார் நிறுவன ஊழியர் பலி

தஞ்சை அருகே மர்ம காய்ச்சலுக்கு தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

Update: 2017-10-14 23:00 GMT
திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள செம்பியன்கிளரி கிராமத்தை சேர்ந்தவர் ராமையன். விவசாய தொழிலாளி. இவருடைய மகன் சிவக்குமார்(வயது30). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. இதனால் பூதலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு சிவக்குமார் பலியானார். இவருக்கு தேவிகா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 1 ஆண்டு தான் ஆகிறது.

மர்ம காய்ச்சலுக்கு பலியான சிவக்குமாரின் உறவினர்கள் கூறும்போது, சிவக்குமாருக்கு டெங்கு காய்ச்சல் என்று டாக்டர் ஒருவர் கூறினார். அவரை மற்ற டாக்டர்கள் கண்டித்தனர். டெங்கு காய்ச்சல் இல்லை. விரைவில் குணமாகிவிடும் என தெரிவித்தனர்.

டெங்கு காய்ச்சல் இல்லை என உண்மையை ஏன்? மறைக்க வேண்டும் என தெரியவில்லை. திருமணமாகி 1 ஆண்டு ஆகியுள்ள நிலையில் மர்ம காய்ச்சலுக்கு பலியாகியுள்ளதால் அவரது குடும்பத்திற்கு தமிழகஅரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். ஆனால் சிவக்குமாருக்கு காய்ச்சல் இருந்தது உண்மை தான். ஆனால் ரத்த பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்