அந்தியூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் சாவு

அந்தியூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலியானார்.

Update: 2017-10-14 23:00 GMT
அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னபருவாச்சியை சேர்ந்தவர் இளையராஜா. அவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 23). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. 9 மாதமேயான மதுமிதா என்ற பெண் குழந்தை உள்ளது.

இளையராஜா அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி ராஜேஸ்வரிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே இளையராஜா ராஜேஸ்வரியை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பெற்று காய்ச்சல் குணமாகவில்லை. அதனால் மனைவியை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறையவில்லை. இதனால் ராஜேஸ்வரி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, ராஜேஸ்வரிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிந்தது. அதனால் டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜேஸ்வரி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

ராஜேஸ்வரியின் உடலை பார்த்து இளையராஜாவும், உறவினர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. 

மேலும் செய்திகள்