தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை

Update: 2017-10-14 22:45 GMT

தூத்துக்குடி,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் இனிப்பு வகைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் இனிப்புகள் பாதுகாப்பான மூல பொருட்களினால் தயார் செய்யப்படுகின்றனவா? என்பதை அறிய மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில், தூத்துக்குடி உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று திடீர் சோதனை நடத்தியது. இந்த குழுவில் அலுவலர்கள் சந்திரமோகன், ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம், டைட்டஸ் பர்னாந்து, பாலசுப்பிரமணியம் ஆகியோர் இருந்தனர்.

தூத்துக்குடி புதிய பஸ் நிலையம், வி.வி.டி. சிக்னல் பகுதி, 3–ம் மைல், சேதுபாதை ரோடு, வட்ட கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடந்தது. இதில், அதிக அளவில் நிறமிகள் சேர்க்கப்பட்ட இனிப்பு வகைகள், காலாவதியான குளிர்பானங்கள் என சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்