வீடுகளில் தேவையற்ற பொருட்களில் தேங்கும் தண்ணீரை உடனே அகற்ற வேண்டும்
மாணவ-மாணவிகள் பெற்றோர்களின் உதவியுடன் வீடுகளில் தேவையற்ற பொருட்களில் தேங்கும் தண்ணீரை உடனே அகற்றவேண்டும் என்று மருத்துவ அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொண்டி,
திருவாடானை தாலுகா பாண்டுகுடி அரசு மேல் நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சாந்த சுந்தரி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் சிவக்குமார், கருப்பையா, வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் ஆசிரியர் ஆல்ட்ரின் சவரிராஜ் வரவேற்றார். இதில் பாண்டுகுடி அரசு மருத்துவ அலுவலர் வைதேகி கலந்து கொண்டு பேசியதாவது:- மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களின் உதவியுடன் வீடுகளில் உடைந்த பாத்திரங்கள், பாட்டில்கள், தேங்காய் சிரட்டை, ஆட்டுக்கல் மற்றும் தேவையற்ற பொருட்கள் போன்றவைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் உடனே அதனை அகற்றுவதுடன், வீடுகளிலும் வீடுகளை சுற்றிலும் கழிவு பொருட்கள் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தண்ணீரை நன்றாக கொதிக்கவிட்டு ஆற வைத்து பருக வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவ மனைகளுக்கு சென்று டாக்டர்களிடம் உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.
வீடுகளின் மேல்மாடிகளில் கழிவு பொருட்களை போடவேண்டாம். மாடிகளில் தண்ணீர் தொட்டிகள் இருந்தால் அதனை மூடி வைக்க வேண்டும். வாரம் ஒருமுறை அதனை சுத்தம் செய்து கிருமி நாசினி மருந்துகள் தெளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பகவதிகுமார், சிவக்குமார், வன்மீகநாதன், ஆரோக்கிய மலர், ஜெயா மற்றும் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளி தாளாளர் மனோகரன் மார்ட்டின் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி துணை இயக்குனர் ரவிச்சந்திரன் டெங்கு காய்ச்சல் பற்றி மாணவிகளுக்கு விளக்கி கூறினார். அதனை தொடர்ந்து சுமார் 1,500 மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவ அலுவலர் புகழேந்தி, அரசு செவிலியர் பள்ளி முதல்வர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியை நிர்மலா நேசமணி நன்றி கூறினார்.
கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் தலைமையில் ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் வீதி வீதியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் நிலவேம்பு குடிநீரை அவர் வழங்கினார்.
செயல் அலுவலருடன் தலைமை எழுத்தர் மெய்மொழி மற்றும் பணியாளர்கள் சென்றனர். இதேபோல அபிராமத்தில் பேரூராட்சி தனி அலுவலர் குமரேசன், செயல் அலுவலர் ராஜாராம் ஆகியோர் தலைமையில் இந்து பஜார், முஸ்லிம் பஜார், பஸ் நிலையம், புதுத்தெரு உள்பட அனைத்து வார்டுகளிலும் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பொதுமக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.