மரக்கூழால் காரின் பாகங்கள்: ஜப்பானிய விஞ்ஞானிகளின் அதிசய முயற்சி
வருங்காலத்தில் மரக்கூழைக் கொண்டு காரின் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி ஒரு முயற்சியில் ஜப்பானிய விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கின்றனர்.
உருக்கினால் செய்யப்படும் காரின் உதிரி பாகங் களுக்குப் பதிலாக மரக்கூழைக் கொண்டு வலுவான பாகங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இன்னும் 12 வருடங்களில் நடைமுறைக்கு கொண்டு வந்துவிடலாம் என்று ஜப்பானிய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
வாகனத்தின் என்ஜினுக்கு அருகே உள்ள உலோக பாகங்களுக்குப் பதிலாக, அதிக வெப்பத்தைத் தாங்கும் பிளாஸ்டிக்கால் ஆன பாகங்களை உருவாக்கும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
அந்த வரிசையில்தான், மரக்கூழ் பாகங்களைத் தயாரிக்கும் முயற்சியும் நடைபெறுகிறது.
எடை குறைந்த கார்களுக்கு குறைந்த எரி பொருளே தேவைப்படும். வாகனத்தின் எடையில் 10 சதவீதம் குறைந்தால் அது வாகனத்தின் எரிபொருள் பயன்பாட்டை 8 சதவீதம் வரை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
கார் தயாரிப்பாளர்கள் மின்சாரத்தில் இயங்கும் கார்களின் எடையையும் குறைப்பதன் மூலம், ஒரு முறை சார்ஜ் செய்தாலே அதிக தூரம் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இங்குதான் மரம் உள்ளே வருகிறது. கப்பல் கட்டவும், வீடுகள் மற்றும் மரப்பொருட்கள் தயாரிக்கவும் நூற்றாண்டுகளுக்கும் மேலாக மரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மரக்கூழில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவிதப் பொருள் உருக்கு போல வலுவானதாகவும், 80 சதவீதம் எடை குறைவாகவும் இருக்கும் என்று கூறுகிறார்கள்.
லட்சக்கணக்கான செல்லுலோஸ் அணுக்கள், நானோபைபர் மற்றும் சிஎன்எப் பிளாஸ்டிக்காக சிதறடிக்கப்பட்டு, அந்த மரக்கூழ், வேதியியல் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இம்முறையில் உண்டாகும் வலுவான கலப்பின பொருள், உருக்குக்கு மாற்றான உதிரி பாகங்களை உருவாக்கப் பயன்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் பொருள், காரின் கதவுகள், மோதலைத் தவிர்க்கும் அமைப்பு மற்றும் காரின் மேற்பகுதி மூடி போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படும் என்று கியோட்டோ பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் குழுவின் தலைவரான பேராசிரியர் ஹிரோயுகி யானோ கூறியுள்ளார்.
பேனாவின் மை முதல் ஒளி ஊடுரும் திரைகள் வரை என பல்வேறு பொருட் களில் செல்லுலோஸ் நானோ பைபர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கார்பன் பைபர் போன்ற வர்த்தக ரீதியாக பயன்பாட்டுக்கு வந்த இலகுரக பொருட்களுக்கு இடையே மிகுந்த போட்டிகள் நிலவும் நிலையில், சிஎன்எப் அடிப்படையிலான பாகங்கள் அதற்கு சாத்தியமான மாற்றாக இருக்க முடியும் என்று பேராசிரியர் யானோ கருதுகிறார்.
ஜப்பானின் மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியரான டாட்சுனோ கனெகோ, உயிரியல் மூலக்கூறுகளால் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை உருவாக்கிவருகிறார்.
இந்தப் புதிய பொருளும் உருக்கைவிட எடை குறைவானதாகவும், 300 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை தாங்கக்கூடியதாக இருக்கும் என்று ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர்.
“வெப்பத்தைத் தாங்க முடியாமல் போவதால், என்ஜினுக்கு அருகிலிருக்கும் வெப்பப் பகுதியில் பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால், நான் உருவாக்கியுள்ள உயிரி பிளாஸ்டிக்குகள் அதிக வெப்பநிலையைத் தாங்கக்கூடும்” என பேராசிரியர் கனெகோ கூறுகிறார்.
இவர் பல ஜப்பானிய கார் தயாரிப்பாளர்கள், கார் பாகங்கள் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தியாளர்களுடனும், வெளிநாட்டு நிறுவனங்களுடனும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இன்னும் ஐந்தாண்டுகளில் உருக்குக்கு ஒரு சாத்தியமான மாற்றாக இருக்கும் பொருளைப் பயன் படுத்துவதன் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, அது வாகனத்தின் எடையை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துவிடும் என்பதே ஆகும்.
எடை குறைந்த பிளாஸ்டிக் கார் பாகங்கள், கரியமில வாயு வெளியாகும் அளவைக் குறைக்கின்றன. ஆனால், அவற்றின் உற்பத்தி வேறு பல சுற்றுச்சூழல் அபாயங்களை ஏற்படுத்துகிறதே?
கண்ணாடி போன்ற பொருட்களைப் பயன்படுத்தி உயிரி பிளாஸ்டிக் போன்ற மாற்றுப் பொருட்களைத் தயாரிப்பது மாசுபாட்டை அதிகரிக்கக்கூடும் என்று பேராசிரியர் கனெகோ ஒப்புக்கொள்கிறார். ஏனெனில் அத்தகைய கழிவுப்பொருட்கள் மக்கும் தன்மை கொண்டவை அல்ல.
ஆனால், தான் உருவாக்கியுள்ள பொருட்கள், பாரம்பரிய பிளாஸ்டிக்கைவிட சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்று அவர் கூறுகிறார்.
வழக்கமான பெட்ரோலிய அடிப்படையிலான பிளாஸ்டிக்குகளின் உற்பத்தி, அதிக அளவில் கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுகிறது. ஆனால் நுண்ணுயிர்களில் இருந்து தயாரிக்கப்படும் உயிரி பிளாஸ்டிக்குகள் குறைந்த அளவு கழிவுகளையே உற்பத்தி செய்கின்றன என்று பேராசிரியர் கனெகோ கூறுகிறார்.
எது எப்படியோ, சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்காத ‘பசுமையான’ பொருட்களைப் பயன்படுத்தும் எண்ணம் வாகனத் தயாரிப்பாளர்களிடம் ஏற்பட்டிருக் கிறது.
இது நல்ல விஷயம்தான்!