திருமருகல் அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
திருமருகல் அருகே பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி அனைத்து கட்சி சார்பில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமருகல்,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அண்ணாமண்டபம் பஸ் நிலையம் அருகில் 2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி அனைத்து கட்சியை சேர்ந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு தி.மு.க. மாவட்டப் பிரதிநிதி அஞ்சாநெடுமாறன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயபால், அ.தி.மு.க.வை சேர்ந்த செங்கதிர், ம.தி.மு.க. மாவட்டப் பிரதிநிதி ராஜசித்தார்த்தன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமருகல் ஒன்றியத்தை சேர்ந்த போலகம், குருவாடி, புதுக்கடை, தெற்குலேரி, திருப்புகலூர், பண்டாரவாடை ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பயிர்க் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் எனக்கோரி முழக்கமிட்டனர். இதில் அனைத்து கட்சியை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் வேணு, சிங்காரவேலு, சாமிநாதன், வீரபாண்டியன், ஆனந்தன், புதுக்கடை சாமிநாதன் செந்தில், பாலு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தகவல் அந்ததும் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் செய்தவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் விவசாயிகள் தாசில்தார் இங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி பயிர்க் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன் உத்தரவின் பேரில் நாகை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் துரைக்கண்ணு சம்பவ இடத்திற்கு வந்து, சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகளிடமும், போராட்டம் செய்தவர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதில் இன்று (சனிக்கிழமை) காலை நாகை தாலுகா அலுவலகத்தில் இது சம்பந்தமாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி கூறியதின் பேரில் விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாகக் கூறி அமைதியாக கலைந்து சென்றனர். பேச்சு வார்த்தையில் திருமருகல் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வசெங்குட்டுவன், சரக வருவாய் ஆய்வாளர்கள் கவிதா, கவிதாஸ் மற்றும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் நாகை- நன்னிலம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.