அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் சிகிச்சை குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிகிச்சை முறையை அரசு முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பணீந்திர ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு சுகாதாரப்பணிகளை அரசு முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பணீந்திர ரெட்டி மற்றும் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு கழிவுநீர் வாய்க்காலில் தூய்மை பணி மேற்கொண்டது, கொசு ஒழிப்பு பணி ஆகியவை குறித்து கேட்டறிந்தனர். மேலும், வீடுகளில் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டுள்ள பாத்திரங்கள், குடங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவைகளை பார்வையிட்டனர். அப்போது டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏ.டி.எஸ். கொசுக்களை ஒழிக்கும் முறைகளை பொதுமக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என சுகாதாரப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பிரிவை பார்வையிட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்கள். மருத்துவர்களிடம் டெங்கு காய்ச்சலுக்கு தேவையான மருந்து பொருட்கள், நிலவேம்பு கசாயம் ஆகியவை போதுமான அளவு இருப்பு உள்ளதா என அரசு முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பணீந்திரரெட்டி கேட்டறிந்தார்.
பின்னர், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், டெங்கு குறித்து இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நட வடிக்கைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும், அனைத்துத்துறை அலுவலர்களை கொண்டு அமைக்கப்பட்ட சிறப்பு குழுக்கள் தினந் தோறும் மேற்கொள்ளும் தூய்மைப்பணிகளை துரிதமாக செயல்படுத்திடவும் அலு வலர்களுக்கு அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகேஷ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரங்கராஜன், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ஹேமசந்த் காந்தி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சங்கர், உடையார்பாளையம் கோட்டாட்சியர் டினாகுமாரி, வட்டாட்சியர் வேல்முருகன், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.