சாத்தான்குளம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவி தற்கொலை

சாத்தான்குளம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-10-13 23:09 GMT

சாத்தான்குளம்,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள அம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் கோயில்ராஜ். இவருடைய மகள் அபிஷா(வயது 19). இவர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் கல்லூரி பஸ்சில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

கடந்த 11–ந் தேதி காலையில் வழக்கம்போல் அபிஷா தனது வீட்டில் இருந்து கல்லூரி பஸ்சில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தை கடந்து பனைக்குளம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அபிஷா திடீரென்று ஓடும் பஸ்சின் கதவை திறந்து கீழே குதித்தார்.

இதைப்பார்த்த சக மாணவ–மாணவிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். ரோட்டில் ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அபிஷாவை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அபிஷா நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

குடும்ப பிரச்சினை காரணமாக மாணவி அபிஷா தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்