கல்பாக்கம் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக 4 பேர் கைது

கல்பாக்கம் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-10-13 22:44 GMT

கல்பாக்கம்,

கல்பாக்கத்தை அடுத்த சீக்கிணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் கடந்த 9–ந் தேதி அந்த பகுதியில் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்கள் 6 பேர் அந்த இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தவரை கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து விரட்டினர்.

பின்னர் அந்த இளம்பெண்ணை 6 வாலிபர்களும் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடினார்கள்.

இது குறித்து அணைக்கட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூவத்தூரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 23), பிரேம்குமார் (24), தினேத் (22), கதிர்வேல் (20) ஆகியோரை கைது செய்து மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்