டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2017-10-13 13:30 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறை நீடுரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அப்துல் சத்தார் வரவேற்றார். துணைத்தலைவர்கள் முபாரக், அம்ஜத் பாஷா, பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், செயலாளர் அமீர் ஹம்சா, ரத்தினம், பொருளாளர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) முதல் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள் தமிழகம் முழுவதும் முழு இயக்கமாக கட்சியினர் மேற்கொள்வது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும். நெடுவாசல், கதிராமங்கலம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும். விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை அரசு ரத்து செய்து விட்டு மாற்று பாதையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்