டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜயகாந்த் ஆறுதல்
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உடல் நலம் குறித்து விசாரித்தார்.
அப்போது அவர் ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். பின்னர் அனைவருக்கும் ரொட்டி, பழம் போன்றவற்றை வழங்கினார். மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரையும் அவர் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சல் விவகாரத்தை அரசியல் ஆக்க விரும்பவில்லை. குப்பைகளை அரசு முன்னதாக அகற்றி இருந்தால் டெங்கு பாதிப்பு வந்திருக்காது. அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்யாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்?. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளிகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். இந்த ஆட்சி வருகிற 30-ந் தேதிக்குள் கவிழலாம். அல்லது ஆட்சி நீடித்தாலும் நீடிக்கலாம். இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் திருவள்ளூர் பஜார் வீதியில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரையும் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களையும் வழங்கினார்.
அப்போது அவருடன் தலைமை கழக துணை செயலாளர் பார்த்தசாரதி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.