திருவள்ளூர் அருகே சிறுமி தீக்குளித்து தற்கொலை

ஆவடி கொல்லுமேடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் தனலட்சுமி (வயது 16). கடந்த 2 நாட்களுக்கு முன்பு,

Update: 2017-10-13 05:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் அருகே குண்டுமேடு புதுவட்டாரம் பகுதியில் உள்ள தனது பெரியப்பா சேகர் என்பவரது வீட்டிற்கு தனலட்சுமி வந்திருந்தாள்.

நேற்று வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று விட்டனர். தனலட்சுமி மட்டும் தனியாக இருந்தாள். அப்போது திடீரென தனலட்சுமி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாள். தகவல் அறிந்த வெள்ளவேடு போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தனலட்சுமி தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்