மணப்பாறையில் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாகும் குடிநீர்

மணப்பாறை,
மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மணப்பாறை நகர் பகுதிக்கு வினியோகம் செய்யப்படும் காவிரி குடிநீர் குழாயில் அவ்வப்போது உடைப்பு ஏற்படுவதும், அதை சரிசெய்வதும் வாடிக்கையாக நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மணப்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள சர்ச் காம்ப்ளக்ஸ் அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து நீர் வெளியேறி கழிவுநீர் கால்வாயில் வீணாக செல்கிறது. இதுபற்றி அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் தொடர்ந்து வெளியேறிய படி உள்ளது. மேலும் சாலை திருப்பத்தில் உள்ள குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சாலையில் தண்ணீர் சென்று கொண்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் நிலை உருவாகி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாக கழிவுநீர் கால்வாயில் செல்வதால் அதிகாரிகள் உடனடியாக குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.