பொதுமக்களை தொந்தரவு செய்ய கூடாது திருநங்கைகளுக்கு, போலீஸ் அதிகாரி எச்சரிக்கை

பொதுமக்களை தொந்தரவு செய்ய கூடாது என திருநங்கைகளுக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.

Update: 2017-10-12 22:45 GMT

புதுச்சேரி,

புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் தலைமையில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புதுவை வெங்கட்டா நகரில் உள்ள தமிழ்சங்கத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டுகள் வெங்கடசாமி, அப்துல்ரகீம், குணசேகரன், ரச்சனாசிங் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் பேசியதாவது:–

திருநங்கைகள் பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தொந்தரவு செய்வதாக பல்வேறு புகார்கள் வருகின்றன. எனவே பொதுமக்களுக்கு யாரும் தொந்தரவு செய்யக்கூடாது.தொடர்ந்து நீடித்தால் உங்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருநங்கைகளுக்கு சுயதொழில் தொடங்குதல், பெட்டிக் கடைகள் அமைத்து தருதல், தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கு தேவையான வாய்ப்புகள் பெற்றுத்தரப்படும்.

அதைத்தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் தலைமையில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் தீபாவளி பண்டிகைக்கு சில தினங்களே உள்ளதால் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென போலீசாருக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்