எந்த கோப்பு என்னிடம் நிலுவையில் உள்ளது? கவர்னர் கிரண்பெடி கேள்வி

புதுவை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் நேற்று முன்தினம் பேட்டியளிக்கும்போது, சமூக வலைதளங்களை பார்க்கும் கவர்னருக்கு கோப்புகளில் கையொப்பமிட நேரமில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

Update: 2017-10-12 22:30 GMT

புதுச்சேரி,

புதுவை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் நேற்று முன்தினம் பேட்டியளிக்கும்போது, சமூக வலைதளங்களை பார்க்கும் கவர்னருக்கு கோப்புகளில் கையொப்பமிட நேரமில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–

கவர்னர் அலுவலகத்தில் எந்த கோப்பு நிலுவையில் உள்ள என்று அமைச்சரால் கூறமுடியுமா? மாறக முதல்–அமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் அலுவலகத்தில்தான் கோப்புகள் தேங்கிக்கிடக்கின்றன. அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுப்பது தொடர்பான ஒரு வருடம் அவர்களது அலுவலகத்தில்தான் தேங்கியிருந்தது. ஆனால் அதிகாரிகள் கோப்புகள் கவர்னர் மாளிகையில்தான் தங்கியிருந்ததாக நினைத்தனர். கவர்னர் அலுவலகம் மீது மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டு கூறுவதால் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்